Monday 25 April 2011

நமதிருமையில் பிறந்த நேசம் 
நமதிருமை அழித்து 
ஒருமை செய்கிறது.. 


இருமை உதிர்ந்து ஒருமை
மலர்ந்ததால் 
மொழிகள் கடந்து வாழ்வோம் இனி 


மௌனமாய்...
தூக்கம் கண்களை மறந்த இரவு 
கற்பனை தீயில் இடுகிறேன் 
வாழ்வினை தொட்டு விலகிய 
அந்த நிமிடங்களை...

நேசம் நிறைந்த நெஞ்சம் 
பரிவோடு அணைத்த கைகள் 
காதல் வழிந்த கண்கள் 
ஆசை எறிந்த தேகம்...
என இவ்வெவையும் புரியாமல் நின்றாய்
அல்லது புரிந்திருந்தும் உன்னுள்ளே புதைத்து விட்டாயோ?

இன்னும் ஒருமுறை உரைக்கிறேன் கேள்
எனது மௌனம் உனது முழுமையை 
தொடும் நாள் வரையில்.. 
காத்துகிடப்பேன் உன்னை நான் 
கண்ட அந்த நதிகரையில்...
அமைதி இழந்த நடுநிசிகளில் 
உயிரை பிழிந்து விடும் உணர்வுகள்.. 
வார்த்தைகளாய் வழிந்து நிரப்புகின்றன 
என் காகிதங்களின் வெறுமையை..

வெறும் வரிகளல்ல அவை என் வலிகள்...